கொவிட் தடுப்பூசி ஒன்றேனும் பெறாதவர்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியை சந்தித்து திகதி ஒன்றை ஒதுக்கிக் கொண்டு தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத நபர்கள் குறிப்பிடத்தக்க அளவிலானோர் சமூகத்தில் உள்ளார்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் ஆபத்து அதிகமாக உள்ளதாகவும், விரைவில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறும் பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பாரியளவு உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் முதலாம் திகதி மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவதற்காக நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 10 மில்லியன் தடுப்பூசிகள் ஜனவரி மாதம் வரையில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளும் மக்கள் அதிக நெரிசல் உள்ள பகுதிகளுக்கு செல்வதனை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.