தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக ஒரு சாதாரண கேரக்டரில் நடித்திருந்தார். ரன்வீர் சிங் படத்தின் மூலம் இந்தியில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ஷாலினி பாண்டே.
தமிழில் ‘100% காதல்’ படத்துக்குப் பிறகு ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்புக்குச் சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரை நீக்கிவிட்டது படக்குழு. தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார்
ஷாலினி பாண்டே தற்போது யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜயேஷ்பாய் ஜோர்தார்’ படத்தில் நடிக்கவுள்ளார். அதற்காகத்தான் உடம்பை குறைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் துப்பட்டா போடுங்க ஷாலினி பாண்டே என்று அறிவுரை சொல்லி வந்தனர். தற்போது ஷாலினி பாண்டே கொழுக் மொழுக்காக இருக்கும் பழைய புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.