10 kg கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

கேரள கஞ்சா 10 கிலோ பொதியுடன் மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 10 கிலோவுக்குமதிக நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.