பாகுபலி பட நாயகன் பிரபாஸ் நடிக்க உள்ள 25ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. பி
ரபாஸ் ‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை வாரிக்குவித்தது.
இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் 25-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியவர் ஆவார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தை பூஷன் குமார் தயாரிக்க உள்ளார்.