ரஷ்யாவில் உச்சமடையும் கொரோனோ பாதிப்பு!

ரஷ்யாவில் கொவிட்-19 நோய்த்தொற்று பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கடந்த சனிக்கிழமை தினசரி நோய்த்தொற்று மரணங்களும் பாதிப்பும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை மட்டும் அங்கு 1,075 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்திருப்பதோடு 37,678 பேர் பாதிக்கப்பட்டனர்.

ரஷ்யாவில் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நாடளவியரீதியில் ஒருவார முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை தலைநகர் மொஸ்கோவில் முடக்கநிலை அமுல்படுத்தப்படவுள்ளது.

தடுப்பூசியை மிகக் குறைவானவர்களே ரஷ்யாவில் போட்டுள்ளனர், அதனால் நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவது அதிகாரிகளுக்குப் பெரும் சவலாக உள்ளது. இதுவரை அந்நாட்டில் 36 வீதமானவர்களே முழுமையாக ஸ்புட்னிக் வி தடுப்பூசியைப் போட்டுள்ளனர்.

இதுவரை நோய்த்தொற்றால் ரஷ்யாவில் 229,52 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு 400,000க்கும் அதிகமானோர்

நோய்த்தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என்று கவனிப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.