‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கருத்தின் அமுலாக்கம் குறித்து ஆராய்ந்து சட்ட வரைவை தயாரிக்க குறித்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.