பாலிவுட் படத்திற்காக பாக்ஸிங் பயிற்சி.! நடிகை ராஷ்மிகா மந்தனா…!!

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

இவருக்கு தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா ரசிகர்களிடம் அடிக்கடி கலந்துரையாடுவார்.


தற்போது இவர் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டே கதியென்று கிடக்கும் ராஷ்மிகா தற்போது நிறைய பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சனுடன் ராஷ்மிகா நடிக்கின்ற திரைப்படத்துக்காக சமீபத்தில் கடுமையான உழைப்பை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.