1 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த OIC கைது… வெளியான தகவல்!

வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய வந்த நபரிடம் இருந்து ஒரு மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வந்துரம்ப பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக நாகொட பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் வாங்க விரும்பிய ஒருவர், வாகன தரகர் ஒருவரினால் கடந்த 11 ஆம் திகதி களுத்துறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து காரில் காலிக்கு அழைத்து செல்லப்பட்ட போது, முச்சக்கர வண்டியில் வந்து காரில் ஏறிய சந்தேகநபர், பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும், வாகனம் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த நபர், பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர் கைதானார்.