ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் ஹூவாய் மேட் எக்ஸ்2 போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை 8 இன்ச் எல்.டி.பி.ஒ. ஒ.எல்.இ.டி. பேனல், 120 வாட் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், கலர் ஓ.எஸ். 12 உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஒப்போ நிறுவனம் எதிர்கால அணியக்கூடிய சாதனத்திற்கான காப்புரிமை பெற்று இருந்தது. புதிய தொழில்நுட்பம் வெனஸ் அன்லாக்கிங் மெத்தட் மற்றும் வெயின் அன்லாக்கிங் டிவைஸ் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இது முக அங்கீகார தொழில்நுட்பத்திற்கு இணையான பயோமெட்ரிக் சிஸ்டம் ஆகும். எல்.ஜி. நிறுவனமும் இதே போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி அதற்கு ஹேண்ட் ஐ.டி. என பெயர் சூட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.