ஆக்கம் கொண்ட சிந்தனைக்கு ஊக்கத்தை அளித்து, எந்தத் தொந்தரவும் இன்றி அந்தச் செயல் தொடரவும் வளரவும், வளர்வதைக் காக்கவும் செய்யும் திறன் இந்த விநாயகன் அருளால் கிடைக்கிறது.
‘உ’ என்பது யஜுர் வேதத்தின் சாரம். ஒரு செயல் தொடங்குவதிலிருந்து, முறையாக நடந்து, சரியாக முடிந்து, நிறைவான பலன் கிட்டும் வழியை விரிவாகச் சொல்கிறது இந்த வேதம்.
முன்வினை, பின்வினை, செய்வினை என்ற எல்லா வினைகளுக்கும் நாயகன் விநாயகன். ஆக்கம் கொண்ட சிந்தனைக்கு ஊக்கத்தை அளித்து, எந்தத் தொந்தரவும் இன்றி அந்தச் செயல் தொடரவும் வளரவும், வளர்வதைக் காக்கவும் செய்யும் திறன் இந்த விநாயகன் அருளால் கிடைக்கிறது.
ஆகவேதான், எந்தச் செயலையும் தொடங்கும் முன்பாக பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.