கொத்மலையில் 61 வயதுடைய நபர் ஒருவரை 21 வயதுடைய இளைஞன் கத்தியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 8 மணி அளவில் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொண்ட கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் 61 வயதான எம்.ஜி.விக்கிரமசிங்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்துள்ள உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் வெட்டியதில் படுகாயமடைந்த நபரை அயலவர்கள் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வழியில் உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்த இளைஞன் தானாக கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு வந்து ஆஜரான நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் மேலதிக விசாரணைக்கு பின் ஹல்பொடை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.