நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி தேசிய மிருகக்காட்சிசாலைகள் மூலம் மக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதே தனது நோக்கம் என தேசிய விலங்கியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை இடமாற்றும் யோசனை எனக்கு இருந்தது, ஆனால் அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இது ஒரு பெரிய திட்டம். மிகவும் கவனமாக செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய விலங்கியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சர்மிளா ராஜபக்ஷ அண்மையில் நியமிக்கப்பட்டார்.
ஷர்மிளா ராஜபக்ஷ, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
ஷர்மிளா ராஜபக்ஷ இதற்கு முன்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் சமூக ஊடகப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.