லாரன்ஸ் இந்தியாவிலே மிகப் பெரிதான ராகவேந்திரர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்

சாதாரண மனிதராக இருந்த தன்னை இந்த உயரத்துக்கு கொண்டு சென்றது ராகவேந்திரரின் அருள்தான் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் ‘லட்சுமி’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்ட ராகவா லாரன்ஸ், தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2ம் பாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரர் சிலையை பிரதிஷ்டை செய்திருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் முதன்முறையாக 15 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ராகவேந்திரா சாமியின் பளிங்கு சிலையை பிரதிஷ்டை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சாதாரண மனிதராக இருந்த தன்னை இந்த உயரத்துக்கு கொண்டு சென்றது ராகவேந்திரரின் அருள்தான் என தெரிவித்துள்ள லாரன்ஸ், தனது மிகப்பெரிய கனவு நனவாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.