இந்துருவ சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் பிரசாத் சில்வா, கோவிட் நோய் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அம்பலாங்கொடை மஹா அம்பலாங்கொடையில் வசித்து வந்த மருத்துவர் பிரசாத் சில்வாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சையும் பெற்றுள்ளார்.
கோவிட் நோய் அதிகரித்தன் காரணமாக மருத்துவர் பிரசாத் நேற்று காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளார் எனவும் சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் கூறியுள்ளது.
இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக ஏற்கனவே சில மருத்துவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.