தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை!

அரசாங்கம் ஒருபுறமும், நாட்டு மக்கள் மறுபுறமும் சென்றால் பெரும் விளைவுகள் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் (Athuraliye Rathana Thero) கடுமையாக எச்சரித்துள்ளார்.

புறக்கோட்டையில் இடம்பெற்ற ‘மக்கள் பேரவை’ எனும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு எமக்குள்ளது. தேசிய பொருளாதாரம், இறையாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.