பொலிஸ் என கூறி கடத்தல் மேற்கொண்டவர்கள் கைது!

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி, கொழும்பு – கிராண்ட்பாஸ், மோலவத்த பிரதேசத்தில் ஒருவரை கடத்திச் சென்று 10 இலட்சம் ரூபாய் பணத்தை கப்பமாக பெற்ற மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி இந்த கடத்தல் சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

கடத்தப்பட்ட நபரின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்தேகநபர், பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டாம் என அச்சுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட நபரின் மனைவி தனியார் வங்கி ஒன்றில் 10 இலட்சம் ரூபாய் பணத்தை வைப்புச் செய்துள்ளார். அந்த பணத்தை எடுத்து கடத்தல்காரர்களுக்கு வழங்கியுள்ளார்.

இதனையடுத்து கடத்தப்பட்ட நபரை சந்தேக நபர்கள் மாபோல பிரதேசத்தில் கொண்டு சென்று போட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மரண பயம் காரணமாக வீட்டார் சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நேற்று செய்த முறைப்பாட்டுக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்களை கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.