ஜரோப்பா வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஐரோப்பாவின் கோடைகால நேரம் இன்று அதிகாலை முடிவுக்கு வந்து குளிர்காலத்திற்குத் திரும்புவதற்கான முன்னோட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் போலவே, ஒக்டோபர் மாதத்தின் இறுதிச் சனிக்கிழமை இரவு கடந்து ஞாயிறு அதிகாலை குளிர்கால நேரத்துக்கு மாறுவதன் அடிப்படையில் இந்த மாற்றம் வரவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வசிப்போராக இருந்தால் நாளை அதிகாலை 3 மணிக்கு கடிகாரங்களின் நேரத்தை மீண்டும் 2 மணிக்கு அமைக்க வேண்டும் எனவும், பிரித்தானியாவானால் அதிகாலை 2 மணிக்கு கடிகாரங்களின் நேரத்தை மீண்டும் 1 மணிக்கு மாற்றியமைக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆயினும் ஸ்மார்ட்போன்கள் எனப்படும் நுண்ணறிபேசிகள் மற்றும் கணினிகளில் இந்த நேரமாற்றம் அவற்றின் தொழிநுட்பம் ஊடாக தானாகவே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில், உள்ள இந்த நேரமாற்றத்தை மீளெடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் நகர்வுகளை எடுத்தாலும், அது இன்னமும் சாத்தியப்படாததால் இந்த முறையும் இந்த நேரமாற்றம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க