கொரோனோவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 512,165 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 539,416 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவர்களில்13,706 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகளாவிய ரீதியில் 246,900,612 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.