கூந்தல் வளர்ச்சிக்கு கடைகளில் கிடைக்கும் செயற்கையான ஷாம்பூ,, கண்டிஷ்னர்களை பயனபடுத்துவர். ஆனால் முடிவளர்ச்சிக்கு ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களும் இன்றியமையாத்தாக இருக்கின்றன. முடிவளர்ச்சிக்கு உதவும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.
முட்டை: முட்டையில் அதிக அளவு புரதம் உள்ளது. மயிர்கால்கள் புரத்ததால் நிரம்பியவை என்பதால் தினமும் உணவில் முட்டை சேர்த்து கொள்வது முடி வளர்ச்சிக்கு உதவும்.
கீரைகள்: பச்சை கீரைகளில் அதிகளவு மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இவை கூந்தலில் சீபம் உற்பத்தியை அதிகரிக்கிறது.
சியா விதைகள்: சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ ஆகியவை முடி வளர்ச்சிக்கு உதவும்.
பெர்ரீஸ்: பெர்ரீஸ்ல் அதிக அளவு வைட்டமின் C,ஆன்டிஆக்சிடன்ட் ஆகியவை உள்ளன. இவை கூந்தலை வலுவாக்கி முடி உதிரவை தடுக்கிறது.
வெந்தயம்: பொடுகு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு வெந்தயமாகும். வெந்தயம் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை இதனால் முடி உதிர்வையும் முடி உடைதலையும் குறைக்கும். வெந்தயம் பயன்படுத்துவதால் கூந்தல் பலம்பெறும்