கர்ப்பமாக உள்ள பெண்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய, மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில நேரங்களில் ஸ்கேன் எடுக்கவேண்டிய தேவை இருக்கும். அவ்வாறு ஸ்கேன் செய்வதாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரை என்பது மிகவும் அவசியம்.
கர்ப்பிணி பெண்கள் முடிந்த வரை 3D மற்றும் 4D ஸ்கேன் வகைகளை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எவ்வித ஸ்கேனும் செய்ய கூடாது. மேலும், வீட்டில் உள்ள கருவிகளை பயன்படுத்தியும் ஸ்கேன் செய்ய முயற்சிக்க கூடாது.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் முறைகளில் அனைத்துக்குறைபாடையும் கண்டறிவது கடினமான ஒன்றாகும். குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலையான Hydrocephalus முதலில் தெரியாமல் போய்விடும். இந்த கோளாறு கர்ப்பகாலத்தின் பிற்பகுதியில் தெரியவரலாம்.
தாயின் கர்ப்பப்பையில் குழந்தை இருக்கையில், குழந்தை படுத்துள்ள நிலையை பொறுத்து சில கோளாறுகள் வழக்கமான ஸ்கேனில் தெரியும். இதனால் சில நாட்கள் கழித்து வரச்சொல்லியும் ஸ்கேன் எடுப்பார்கள். இடைப்பட்ட நாட்களில் குழந்தையின் நிலை சற்று மாறி இருக்கும்.
ஒல்லியாக உடல் அமைப்பை கொண்ட பெண்களின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் பெரும்பாலும் எளிதில் கண்டறியக்கூடிய வகையில் இருக்கும். உடல் பருமனுடன் பெண்கள் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளின் பிரச்சனை எளிதில் கண்டறிய இயலாது. இதன்போது, கூடுதல் ஸ்கேன் எடுப்பது இயல்பு.