பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!

நமது ஊர்களில் தாராளமான அளவு கிடைக்கும் பப்பாளிகளை, சிலர் வீடுகளில் வளர்ந்தும் இருப்போம். இன்று பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம். 

பப்பாளி பழத்தின் விதைகள் ஒட்டுண்ணிகளுக்கும் எதிராக செயல்படுகிறது. வலியை குறைக்க உதவி சேகரித்து. வயிற்று வலி மற்றும் படர்தாமரை போன்ற பிரச்சனைக்கு மருந்தாகவும் இருக்கிறது.

பப்பாளியின் சுவை மற்றும் சத்துக்கு என்றுமே தனி இடம் உண்டு. பப்பாளி பழம் எளிதில் ஜீரணமாகும் மருத்துவ குணம் கொண்டது என்பதால், பலரும் அதனை உண்டு மகிழ்வது வழக்கம். மேலும், அதில் கொழுப்பு சத்தும் கிடையாது.

பப்பாளி பழத்தில் உள்ள தாது உப்புகள், வைட்டமின்கள் காரணமாக உடலுக்கு பலம் கிடைக்கிறது. 100 கிராம் எடையுள்ள பப்பாளியில், 61.8 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. இதனால் உடலுக்கு தீங்கு விலைக்கும் நோய்கள் விரட்டப்படுகிறது.

மேலும், நோய்தடுப்பு மண்டலத்தினை புத்துணர்ச்சியாக வைத்து பராமரித்து உடலை பாதுகாக்கிறது. இதனைப்போல பீட்டா கரோட்டின், லுட்டின், சி சாந்தின், கிரிப்டோசாந்தின் போன்ற சத்துக்களும் உள்ளது.

உடல் தோலை பளபளப்போடு பாதுகாக்கும் தன்மையும், பார்வை திறனை அதிகரிக்கும் தன்மையும் பப்பாளியில் உள்ளது. உடலுக்கு புத்துணர்ச்சி கிடைத்து, வளர்ச்சிதை மாற்ற பிரச்சனையும் சரியாகிறது.

பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உடல் செல்கள் மற்றும் சரும பளபளப்பை ஏற்படுத்துகிறது. இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை கட்டுக்குள் இருக்கவும் உதவி செய்கிறது.