சீரியல் நடிகை பவித்ராவின் காதலர் யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு தொடங்கப்பட்ட சீரியல் தென்றல் வந்து என்னை தொடும்.

ஆரம்பமே பெரிய சர்ச்சையில் மாட்டியது இந்த சீரியல், தமிழ் கலாச்சாரத்தை சீர் குலைக்கும் வகையில் தொடர் புரொமோ உள்ளது என பெரிய பிரச்சனைகள் எழுந்தது.

இப்போது சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இதில் மிகவும் தைரியமான பெண்ணாக நடித்து வருகிறார் பவித்ரா.

இவரிடம் பலர் காதலர் யார் என கேள்வி கேட்டிருப்பார்கள் என தெரிகிறது, திடீரென தனது இன்ஸ்டாவில் காதலர் யார் என தெரிந்துகொள்ள ஒரு நேரத்தை குறிப்பிட்டு அப்போது வாருங்கள் என பதிவிட்டார்.

பின் ஒரு பொம்மை கேரக்டருடன் வீடியோ போட்டு இவர் தான் எனது காதலர் என விளையாடியுள்ளார்.