பிரிட்டன் பிரதமர் மேற்கொள்ள இருக்கும் அதிரடி திட்டம்

பிரிட்டன் இந்த வருட இறுதிக்குள் சுமார் 2 கோடி தடுப்பூசியை பிற நாடுகளுக்கு வழங்கயுள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, சுமார் 2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை இந்தாண்டு இறுதிக்குள் பிற நாடுகளுக்கு வழங்க இருக்கிறோம்.

இதற்கு முன்னரே பிரிட்டன் அரசாங்கம் 10 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஏழை நாடுகளுக்கு வழங்கி உள்ளோம்.

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பி கொண்டுவர உலக நாடுகள் உழைக்க வேண்டும். உலகின் முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கு கொரோனவை முழுமையாக ஒழித்தாலே தீர்வு ஏற்படும் என்று தெரிவித்தார்.

சமூக இடைவெளி மற்றும் தடுப்பூசியால் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியைச் செலுத்த பல்வேறு உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி வருகின்றன.