ரஷ்யாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவருக்கும் ஒரு வார காலம் முழு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஓராண்டு காலம் கடந்தும் தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் சில மாதங்களாக ரஷ்யா நாட்டில் கொரோனா பயங்கர தீவிரமாக தாக்கி வருகின்றது.
நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 40,251 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனவை கட்டுக்குள் அடக்க அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது நாட்டில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அக்டோபர் 30 முதல் நவமபர் 7 வரை ஊதியத்துடன் கூடிய ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளார். அதன் படி இந்த உத்தரவு இன்று முதல் அமலில் இருந்து வருகிறது.
ரஷ்ய மக்களுக்கு ஸ்புட்னிக் v தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில் 32.5% சதவீத மக்கள் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.
தற்போது ரஷ்யாவில் கொரோனா வேகமாக பரவுவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்த ஒரு வார விடுமுறையில் மக்கள் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டிலே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாஸ்க்கோவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் அப்பகுதியில் அத்தியாவசிய பொருள்களை விற்கும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ரஷ்யா நாட்டில் இது வரை கொரோனா நோயால் 4.5 லட்சம் பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.