இந்திய மருத்துவ அதிகாரி அமெரிக்காவில் கொலை!

அமெரிக்காவில் மருந்து நிறுவன அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலத்தின் பிளைன்ஸ்போரோ நகரத்தில் வசித்து வந்த இந்தியர் தான் ஸ்ரீரங்க அரவப்பள்ளி. இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர்.

சூதாட்டத்தில் ஆர்வமுள்ள ஸ்ரீரங்கா, பிலடெல்பியா நகருக்கு வெளியே உள்ள சூதாட்ட விடுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு விளையாடி, 10 ஆயிரம் டாலர் (ரூ.7.50 லட்சம்) பணத்தைக் குவித்தார். பின் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டுக்கு காரில் கிளம்பினார். சுமார் 80 கிலோமீற்றர் வரை பயணித்த அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் ஸ்ரீரங்கவிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

அப்போது இடம்பெற்ற தகராறில் அந்த வாலிபர் ஸ்ரீ ரங்காவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். மருந்து நிறுவன அதிகாரியை சுட்டு கொன்ற ஜெகாய் ரீட் ஜான் என்ற 27 வயது வாலிபனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.