மணாலியில் தேனிலவு சென்ற தம்பதியின் தேனிலவு கனவை பாழாக்கிய ஓட்டல் நிர்வாகத்திற்கு ரூ27ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருமணம் முடித்த ஒவ்வொரு தம்பதிக்கும் தேனிலவு என்பது தன் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைகிறது. இதற்காக புதுபுது சுற்றுலா தலங்களை தேடி செல்வது வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் திருமணம் முடிந்ததும் மணாலி பகுதிக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டனர். அவர்களுடன் நண்பர்கள் தம்பதியும் இணைய 4 பேரும் ஒரு டிராவல் ஏஜென்ஸியை தொடர்பு கொண்டு ஒரு ஜோடிக்கு ரூ10,302 என்ற மதிப்பில் ஹனிமூன் பேக்கேஜை தேர்வு செய்தனர்.
திட்டமிட்டபடி மணாலிக்கு சென்ற போது அங்கு இவர்களுக்கு வழங்கப்பட்ட ரூம் இவர்கள் புக் செய்யும் போது இவர்களுக்கு காட்டப்பட்ட ரூம் போல இல்லாமல் வேறு மாதிரியாக இருந்துள்ளது.அதாவது அந்த ரூமில் பால்கனி வியூ எல்லாம் இருந்துள்ளது. ஆனால் வழங்கப்பட்ட ரூமில் இப்படி பால்கனி இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த தம்பதியினர் ஹோட்டல் நிர்வாகம், டிராவல் ஏஜென்ஸியிடம் கேட்டபோது உரிய பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த தம்பதி அந்த ஓட்டலைவிட்டுவிட்டு வேறு ஹோட்டலில் தனியாக காசு கொடுத்து தங்கினர். இந்நிலையில் ஹனிமூனை முடித்து வீடு திரும்பியதும் குறிப்பிட்ட ஹோட்டல் மற்றும் டிராவல் ஏஜென்ஸி மீது அந்த தம்பதியினர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு மனிதனிற்கு தேனிலவு என்பது வாழ்வில் மறக்க முடியாத ஒன்று அதில் ஏமாற்று வேலை நடப்பதை ஏற்க முடியாது என கூறி அந்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு ரூ.27,302 அபராதமாக விதித்தனர்.