வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது. அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூ. வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன. வாழைப்பூ வடையை சாப்பிட்டு வந்தால், வயிற்று புண்கள் சரியாகும். வாழைப்பூவானது மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கப்
கடலைப்பருப்பு – 4 கப்
உளுத்தம் பருப்பு – 2 கைப்பிடி
சோம்பு – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 8
வெங்காயம் – 4 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் – 1 லிட்டர்
செய்முறை –
வாழைப்பூவில் உள்ள நரம்பு போன்ற பகுதியை அகற்றி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஊறிய பருப்பை மிக்ஸ்யில் போட்டு வடை பதத்தில், கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையுடன் வாழைப்பூ, வெங்காயம், சோம்பு, உப்பு, பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி, புதினா சேர்த்து பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.
மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான வாழைப்பூ வடை தயாராகி விடும்.
வாழைப்பூ வடையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்