சிவப்பு நிறத்தில் கண்ணை கவரும் தன்மை உடைய பழம் தக்காளி. அன்றாட உணவில் தக்காளியின் பங்கு அதிகமே. இது ஒரு புறம் இருக்க அதன் மருத்துவ தன்மைக்கும் இதை நாம் உணவில் சேர்த்து வருகின்றோம்.
தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது அது உடலில் பலவித எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. தக்காளி செடியின் இலைகளை சமையலுக்கு பயன்படுத்தும் பழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபாத்தான ஒன்றாகும். தக்காளி சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் அதுவே அதிகளவில் எடுத்துக் கொண்டால் உடலில் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
குடல் வீக்கம்
தக்காளி அதிகமாக சாப்பிட்டால், தக்காளியின் தோல் செரிமானம் அடையாத தோல். தக்காளி விதைகள் உங்கள் வயிற்றின் செயல்பாடு மற்றும் குடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இவை குடலில் ஒட்டிக்கொண்டு வீக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் குடல் இயக்கங்களை பாதிக்கும் முக்கிய உணவாக தக்காளி உள்ளது.
நெஞ்சு எரிச்சல்
தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும்.
இருமல், தும்மல்
அடிக்கடி தக்காளியை சாப்பிட்டால் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும்.
கிட்னி பிரச்சினை
அதிகமாக தக்காளி சாப்பிட்டால் கிட்னியின் செயல்பாடுகளை குறைத்துவிடும்.
சிறுநீரக கற்கள்
தக்காளி விதை தக்காளியினுள் உள்ள விதைகளை அதிகமாக சாப்படுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இந்த விதைகளெல்லாம் எளிதில் செரிமானமாகாமல் இருப்பதோடு, அவை சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்.
ஆசிட்
தக்காளியில் அதிகளவு ஆசிட் இருக்கிறது. இதனை எடுப்பதால் வயிற்றில் எரிச்சல் உண்டாகும். தக்காளியில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் இதனால் வயிற்றில் அதிகளவு கேஸ்ட்ரிக் கேஸ் உற்பத்தியாகும்.