யார் பலமானவர்கள்? ஆரோக்கியமான உடலைக் கொண்டு தொடர்ந்து ஜிம்மிற்குச் செல்பவரா? இல்லை, மனதளவில் ஆரோக்கியமாக உள்ளவர்களா? இந்த கேள்வி சமீபத்திய நிகழ்வுகளால் ஏற்படுத்தியிருக்கிறது.
உதாரணமாக, நேற்று கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வழக்கையை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர் மட்டும் 46 வயதில் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை. கடந்த மாதம் நடிகர் சித்தார்த் சுக்லா (41), மற்றும் கடந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (36) ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
இது குறித்து, பத்ம பூஷன் விருது பெற்றவரும், இந்தியாவின் சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவருமான டாக்டர் பாண்டா கூறியதாவது –
உடற்பயிற்சி செய்வதால் நல்ல மற்றும் கெட்ட விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை ஒருவர் எப்படிச் செய்கிறார் என்பதைப் பொறுத்துதான் உள்ளது. உடலுக்கு மிதமான உடற்பயிற்சி தேவை.
குறைந்த அளவு அல்லது அதிக அளவிலான உடல் செயல்பாடு பாதகமான விளைவுகளை ஏற்பட வழிவகுக்கும். இதில் இதய நோய்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. 5-10 நிமிடங்கள் வார்ம்-அப் செய்ய வேண்டும். 20-30 நிமிட உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
5-10 நிமிடங்கள் உடலை குளிர்விக்க வேண்டும். உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உடற்பயிற்சி செய்பவர்கள் நன்றாக கவனிக்க வேண்டும். மார்பின் இடது பக்கத்தில் வலி ஏற்படுகிறதா அல்லது மூட்டுகளில் வலிகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
அப்படி வலிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.