பிக்பாஸ் நிகழ்ச்சியில் பவானி குறித்து கமலிடம் ஓப்பனாக கூரிய ராஜு!

பிக்பாஸ் வீட்டில் பவானி மற்றும் ராஜூ இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்து வரும் நிலையில் கமல் முன்னிலையில் ராஜு வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் கடந்த வாரம் சுருதி மற்றும் பவானி தான் அதிகம் விமர்சிக்கப்பட்டு மாறி மாறி அழுது கொண்டு இருந்தனர். அவர்கள் தாமரை ஆடை மாற்றி கொண்டு இருக்கும் போது அவரின் காயின் எடுத்து கொண்டு வந்தது தவறு என கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார்.

மேலும் பவானி உண்மையை பேசாமல் பொய் பேசியதையும் கமல் கண்டித்தார். உண்மை யாரிடம் பேசினாலும் உண்மையாக தான் இருக்க வேண்டும் என கமல் கூறுகிறார். ஒரு விஷயத்தை செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றால் செய்யாதீர்கள் என ராஜாஜி சொன்ன ஓர் விஷயத்தியும் கமல் நேற்றைய நிகழ்ச்சியில் சுட்டி காட்டினார்.

மேலும் காயின் பிரச்னையின் போது பவானி மற்றும் ராஜு இடையே சற்று பெரிய வாக்குவாதம் இடம்பெற்றது, அப்போது பாவனியிடம் ராஜு கேட்ட கேள்வி சரியானது தான் என கமல் கூறுகிறார். இப்படி எடுக்கக்கூடாது என ரூல்ஸ் இல்லை என பேசிய பாவனியிடம், இங்கு எச்சில் துப்பக்கூடாது என்று கூட தான் போடவில்லை, அதற்காக எல்லோரும் துப்புவோமா? என ராஜு கேட்டிருந்தார்.

ராஜு பேசியது உண்மையான விஷயம் என கமல் ஆமோதித்தார். மேலும் தாமரையில் தனிபட்ட இடத்தில் சென்று காயின் திருடி வந்த பவானி மற்றும் சுருதியை அவர் தவறு என கூறி விமர்சித்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நிகழ்ச்சியில் கமல் ஹாசன் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார். அதில் எந்த போட்டியாளர் முகமூடி அணிந்துகொண்டிருக்கிறார் என ஒவ்வொருவராக சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கிறார்.

அப்போது பேசிய ராஜு, யார் முகமூடி உடன் இருக்கிறார்கள் என எனக்கு 100 சதவீதம் தெரியாது. அதில் பவானி மீது தான் அதிக சந்தேகம் வருகிறது என  சிரித்துகொண்டே சென்னார், அது உண்மையா, இல்லை வேண்டுமென்ற செய்கிறாரா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

சில நேரங்களில் பவானி செய்யும் விஷயங்கள் பார்த்து அவர் மூக்கிலே குத்த வேண்டும் என்பது போல் கோபம் வரும். ஆனால் நான் அதை மறைத்துவிட்டு முகமூடி போட்டுக்கொள்வேன். அதனால் என் முகமூடியை நானே போட்டுக்கொள்கிறேன் என சொல்கிறார்.

இதேவேளை அந்த மாஸ்கை யாருக்காவது கொடுக்கவேண்டும் என கமல் சொல்ல, அதை பவானியிடம் சென்று கொடுக்கிறார். கடந்த வாரம் இவர் போலியாக ஆக இருக்கிறார் என சந்தேகம் உடன் நாமினேட் செய்தேன், தற்போது இந்த மாஸ்க் கொடுக்கிறேன் என ராஜு சொல்கிறார். இதை கேட்டு பவானி கோபப்படாமல் பொறுமையாக சிரித்துக்கொண்டே அந்த மாஸ்க்கை வாங்கி கொள்கிறார்.