பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் சண்டை உருவாகிவருகிறது.
அதில் முதன்மையான சண்டை பிரியங்கா மற்றும் அக்ஷரா ஆகியோரிடையே தான் நிலவி வருகிறது அதுவும் தொடக்கம் முதலே நிலவி வருகிறது. இந்த நிலையில் கமல் போட்டியாளர்கள் இடம் யாருக்கு என்ன பொருந்தும் என்று ஒரு சீட்டை எடுத்து கொடுக்க சொல்கிறார்.
பிரியங்கா அக்ஷராவுக்கு, கன்பியூஸ் என்ற சீட்டை எடுத்துக் கொடுக்கிறார். அதற்கு பதிலடியாக அக்ஷராவும், பிரியங்காவிற்கு மற்றவர்களை காயப்படுத்துபவர் என்ற சீட்டை எடுத்து சிரித்துக்கொண்டே கொடுக்கிறார். சீட்டை வாங்கிய பிரியங்காவின் முகம் சற்றே கோபமானது போல் தெரிந்தது. இதற்கு அடுத்தபடியாக அந்நியன் விக்ரம் கெட்டப்பில் நிரூப் வந்தார்.
அவரும் அக்ஷராவுக்கு, போலியானவர் என்ற சீட்டை கொடுத்தார். அந்த சமயத்தில் அக்ஷரா நிரூப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதுவும் கமல் இருக்கின்றார் என்பதை மறந்து. இவை அனைத்தையும் கமல் ஹசன் அவர்கள் பொறுமையாக கவனித்து கொண்டிருந்தார். இவை அனைத்தும் எங்கு சென்று முடியும் என்பது பிக் பாஸின் இறுதியில் தான் தெரியும்.