நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை.!!

விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்கள் மூலம் பிரபலங்கள் பிரபலமாகியுள்ளனர். ஆனால் கொஞ்சம் ஹிட்டானதும் சீரியல்களில் இருந்து வெளியேறிவிடுகிறார்கள்.

அப்படி தான் கடந்த சில நாட்களாக சீரியல்களில் இருந்து பிரபலங்கள் வெளியேறியுள்ள செய்தி அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காவ்யா, காற்றுக்கென்ன வேலி சீரியலில் தர்ஷன் என சீரியல்களின் முக்கிய நடிகர்கள் வெளியேறி வருகிறார்கள்.

இப்போது இன்னொரு சீரியல் குறித்து தகவல் வந்துள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்த ரச்சிதா சீரியலில் இருந்து வெளியேறியுள்ளாராம்.

அவர் தனது இன்ஸ்டாவில் பாய் மகா என பதிவு செய்து செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.