ரஜினியின் அண்ணாத்த படம் லாபமா..? நஷ்டமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் பிசினஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.

அண்ணாத்த திரைப்படத்தின் முழு பட்ஜெட் ரூ. 182 கோடி. இதில் ரஜினிகாந்தின் சம்பளம் மட்டுமே ரூ. 100 கோடி. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.

இதில் தமிழக தியேட்டரிகல் மூலம் சுமார் ரூ. 55 கோடி வரை ஷேர் கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். மேலும் கேரளாவில் ரூ. 3 கோடி, கர்நாடகாவில் ரூ. 4.50 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 12 கோடி வரை ஷேர் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த இடங்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேரடியாக இப்படத்தை வெளியிடுகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் வட இந்திய தியேட்டரிகல் மூலம், ரூ. 1 கோடியும், ஓவர் சீஸ் இடங்களில் ரூ. 15 கோடியும் ஷேர் கிடைக்கும் என்று தற்போதுள்ள நிலையை வைத்து கூறப்படுகிறது. சாட்டிலைட் ரைட்ஸ் ரூ. 50 கோடி, டிஜிட்டல் ரைட்ஸ் ரூ. 45 கோடி, ஆடியோ ரைட்ஸ் ரூ. 2 கோடி என சன் பிக்சர்ஸ் நியமனம் செய்துள்ளதாம்.

ஆனால் இந்த மூன்று ரைட்ஸ்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விற்காமல் தன்னுடேனே வைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் அண்ணாத்த படத்தின் மொத்த பிசினஸ் ரூ. 187 கோடி என்றும், இதன்முலம் ரூ. 5 கோடி லாபம் கிடைத்துள்ளது என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார். ரஜினியை வைத்து படம் எடுத்து வெறும் ரூ. 5 கோடி தான் லாபமா என்று பலரும் ஷாக்காகியுள்ளனர்.

ஒரு பக்கம் கொரோனா சூழ்நிலை காரணமாக இருந்தாலும், மற்றொரு புறம் இதற்குமுன் வெளியான ரஜினியின் தர்பார் படத்தின் வீழ்ச்சியும் இதற்கு காரணம் என்று தெரிவிக்கின்றனர். இருந்தாலும், பொறுத்திருந்து பார்ப்போம் அண்ணாத்த திரைப்படம் வெளியானதற்கு பின்பு எவ்வளவு வசூல் செய்கிறது என்று.