இலங்கையின் தடுப்பூசி அட்டைக்கு பிரித்தானியா வழங்கிய அங்கீகாரம்

இலங்கையில் பயன்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசி அட்டைக்கு பிரித்தானியா அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கு பயணிக்கும் போது தங்களது தடுப்பூசி அட்டைகளை சான்றாக பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் (01-11-2021) முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்படுகின்றது. பிரித்தானிய அரசாங்கத்தின் இணைய தளத்தில் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக இரண்டு தடுப்பூசி மாத்திரைகளையும் ஏற்றிக் கொண்டிருக்க வேண்டுமேன அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ரா சென்கா, பைசர், மொடர்னா மற்றும் ஜென்சன் ஆகிய தடுப்பூசிகள் பிரித்தானிய அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.