யாழ் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாகக் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சி தென்மராட்சி வலிகாமம் தீவகம் போன்ற பலபகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை வடமராட்சி கிழக்கு தென்மராட்சி பிரதேசங்களில் நெல்வயல்கள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது.
அதேவேளை வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் முருகன் ஆலயத்தைச் சூழவுள்ள பகுதி நீர் தேங்கி நிற்பதால் ஆலயத்திற்குச் செல்லும் அடியார்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.