கல்வியமைச்சு எடுத்துள்ள அதிரடி முடிவு!

இலங்கையில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, அமைச்சின் இடமாற்றப் பிரிவுக்கு ஆசிரியர்களை அழைப்பதில்லை என்று கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் 0112 784434 / 011 2 785141 அல்லது 1271 மற்றும் 1272 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக அமைச்சுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சனைகளை directorttb@moe.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.