தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் (M.k Stalin) அவர்கள் பார்வையிட்டுள்ளார். இதுதொடர்பில் சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழகத்தில் வேலூர் மாவட்டம், மேல்மொணவூர் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இன்று (02/11/2021) தமிழக முதல்வர் பார்வையிட்டுள்ளார்.
மேலும் அங்கு சென்று பார்வையிட்டது மாத்திரம் அல்லது ஆய்வு செய்து அங்குள்ள இலங்கைத் தமிழர் குடும்பத்தினரிடம் விவரங்களை கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை அங்கு உரையாற்றிய போது, இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
மேலும் சமீபத்தில் போட்டி ஒன்றில் இலங்கை அகதிகள் முகாமையை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதேவேளை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமையில் இருந்த பச்சிளம் குழந்தை ஒன்றை தூக்கி வைத்து கொஞ்சினார். குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.