இத்தாலி தலைநகர் ரோம்மில் நடைபெற்ற ஜி20 உலக மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி சில முக்கிய நகர்வுகளை செய்து இருப்பதாக உலக நிகழ்வுகள் குறித்து பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதி வரும் பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு :-
ரோம் ஜி20 மாநாட்டில் சீனாவுக்கு அடுத்த அடியினை கொடுத்துவிட்டு திரும்பியிருக்கின்றார் மோடிஆம், ரோமில் ஜி20 மாநாட்டின் இடையே பிரான்ஸ் அதிபரும் மோடியும் சந்தித்து பேசியதில் சீனாவுக்கு எதிராக பசிபிக் கடலில் ஒரு ராணுவ கூட்டணியினை பிரான்ஸ் அமைக்க இருக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ள இந்தியாவுக்கும் முக்கிய அழைப்பு விடுக்கப்பட்டது.
பிரான்ஸ் இந்தியாவின் நட்பு நாடு, இப்பொழுதெல்லாம் இந்தியாவின் ராணுவ கூட்டணி மற்றும் ஆயுதநாடுகளெல்லாம் மிகவும் மாறிவிட்டன, மோடி செய்திருக்கும் மாயம் இது, முன்பு 100% ஆயுத இறக்குமதிக்கு ரஷ்யாவினை மட்டும் இந்தியா நம்பியிருந்தது அல்லது ரஷ்யபிடி அப்படி இருந்தது, ரஷ்யாவின் காயலான் கடை சரக்குகளை எல்லாம் நல்ல தொகைக்கு இந்தியாவுக்கு விற்று கொண்டிருந்தது மோடி அதிலிருந்து இந்தியாவினை விடுவித்து நாட்டுக்கு எது நல்லதோ அந்த வகைக்கு மாற்றி ரஷ்யா தவிர மற்ற நாடுகளிடமிருந்து ஆயுதம் வாங்கினார்.
இதில் பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் என பலநாடுகள் நட்பாயின, உலகளவில் பிரான்ஸின் விமான தொழில்நுட்பம் அமெரிக்கா போல் வலுவானது.பசிபிக் கடலில் பிரான்ஸுக்கு ஏகபட்ட தீவுகள் உண்டு, ஆம் ஒரு காலத்தில் பிரான்ஸ் பிடித்த தீவுகள் அவை, அதனால் தன் நிலபரப்பை காக்க கப்பல்படை கூட்டணி அமைக்கும் அவசியம் அவர்களுக்கும் உண்டு பிரான்ஸ் என்பது ஐரோப்பாவில் மட்டும் இருக்கும் நாடு அல்ல, அதன் தீவுகள் உலகெங்கும் உண்டு, இந்திய கடலில் இருக்கும் தீவுகளை காக்க இந்திய உதவி பிரான்சுக்கு அவசியம், ஏற்கனவே குவாட் அமைப்பில் இருக்கும் இந்தியா இனி பிரான்ஸ் அமைக்கபோகும் அணியிலும் சீனாவுக்கு எதிராக இடம்பெறும், ஆம் இரு வலுவான அணிகளில் தன்னை இணைத்து சீனாவினை சுற்றி ஆணி அடிக்கின்றது இந்தியா, நேருகால அணிசேரா கொள்கையினை கடலில்வீசி நாட்டுக்கு எது அவசியமோ அதை செய்கின்றார்.
மோடி இதையே கொஞ்சம் ஆழமாக பாருங்கள் , காங்கிரஸ் அரசு கடைசிவரை நேருவின் அணிசேரா கொள்கையில் இருந்தது, அதாவது இந்தியா யார் அணியிலும் சேராது, அதனால் இந்தியாவினை யாரும் தூக்கி போட்டு மிதித்தாலும் எந்த அணியும் கேட்காது.
இதனால்தான் 1962ல் சீனா முகத்திலே குத்தியபொழுதும் ஒரு நாடும் இந்தியா பக்கம் வரவில்லை, இப்பொழுதும் இந்தியா பழைய இந்தியா எந்த அணிக்கும் செல்லாது என நினைத்துத்தான் சீனா வாலாட்டியது, ஆனால் நாட்டின் பாதுகாப்புக்காக எந்த முடிவினையும் எடுக்க தயார் என அணிசேர்ந்த இந்தியா சீன வாலில் ஆணி அடித்து எல்லையில் கட்டி வைத்திருக்கின்றது ரோமில் மிகபெரிய ராணுவ கூட்டணிக்கு அச்சாரமிட்டு வெற்றிகரமான காரியத்தை தேசத்துக்கு தேடிதந்திருக்கின்றார் மோடி, காலம் தந்த தலைவனின் வழிகாட்டலில் காலமெல்லாம் இல்லா பெரும் பலம் தேசத்துக்கு கிடைத்து கொண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.