நாட்டில் மின்சாரத் தடை ஏற்படாது… அரசாங்கம்

நாட்டில் மின்சாரத் தடை ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார். சில தொழிற்சங்கள் போராட்டத்தில் குதிக்க உத்தேசித்துள்ள நிலையிலும் மின்சாரத் தடை ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என பல தொழிற்சங்கங்கள் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் மட்டுமே போராட்டத்தில் குதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் தடைப்பட்டால் அதனை சீர் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின்சாரத் தடை ஏற்பட்டால் அதனை சீர் செய்வதற்கு இராணுவத்தை ஆயத்த நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை எனவும், அதற்கான அவசியம் எழாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.