நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகாவாக இனி நடிக்கப்போவது இவர்தானாம்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நிறைய நடிகர்கள் மாற்றம் நடக்கிறது. இதனால் ரசிகர்கள் என்னப்பா இது, இதற்கு ஒரு என்ட் கார்ட்டு இல்லையா என புலம்பி வருகிறார்கள்.

தொடர்ந்து அடுத்தடுத்து முக்கிய சீரியல்களில் பிரபலங்கள் மாற்றம் நடந்ததால் ரசிகர்கள் புலம்புகிறார்கள். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கூட மகா வேடத்தில் நடித்துவந்த ரச்சிதா சீரியலில் இருந்து வெளியேறியதாக கூறியிருந்தார்.

இப்போது என்ன தகவல் என்றால் அவருக்கு பதிலாக அரண்மனை கிளி சீரியலில் நாயகியாக நடித்துவந்த மோனிஷா இனி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்கின்றனர்.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.