பிரபாகரனின் இறுதி தருணம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முன்னாள் நோர்வே இராஜதந்திரியும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் ஊடகம் ஒன்றில் பதிலளித்துள்ளார்.
கேள்வி : பிரபாகரனின் இறுதி தருணம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
பதில்: அதற்கு என்னிடம் பதில் இல்லை. என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழர் தரப்பு அல்லது இலங்கை இராணுவம் முன் வந்து உண்மையை சொல்ல வேண்டும்.
கேள்வி : ஆனால் விடுதலைப் புலிகள் உங்களைத் தொடர்பு கொண்டதாக நீங்கள் சொன்னீர்கள்?
பதில்: அவர்கள் எங்களை அணுகியிருந்தனர், ஆம். ஆனால் பிரபாகரன் பற்றிய எந்த தகவலும் எங்களிடம் இல்லை. போரின் கடைசி சில மாதங்களில் புலிதேவன் மற்றும் நடேசன், அவர்களுடன் தொடர்பு கொண்டோம் அவர்களுடாகவே பிரபாகரனுடன் தொடர்புகொள்ளப்பட்டது.
கேபி (புலிகளின் தலைவர் குமரன் பத்மநாதன்) சிங்கப்பூரில் உள்ள விடுதலைப் புலிகளின் வெளியுறவுக் கொள்கைப் பேச்சாளராக இருந்ததால், அவரை ஒஸ்லோவுக்கு அழைத்தோம். கேபி வர ஒப்புக்கொண்டார், அவர் [பிரபாகரனை] சிங்கப்பூரில் இருந்து நோர்வேக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.
ஆனால் பிரபாகரனின் உத்தரவின் பேரில் அந்த சந்திப்பு கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டது. எனவே பல உயிர்களைக் காப்பாற்றக்கூடியதாக , போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்ய பிரபாகரன் தொடர்ந்து மறுத்துவிட்டார்.
கேள்வி; 2009 மே 17 அன்று விடுதலைப் புலிகள் உங்களைத் தொடர்பு கொண்டதாக நீங்கள் சொன்னீர்கள். அன்றைய தினம் நிலைமைஎவ் வாறு இருந்தது? பிரபாகரன் எங்கே இருந்தார்?
பதில்; 2009 மே 17 க்கு முன்னர், போருக்கு ஒரு ட முடிவைக் கண்டறிவதற்கான ஒழுங்கை மேற்கொள்வதே எங்களுக்கு முக்கிய பிரச்சினையாக இருந்தது. விடுதலைப் புலிகள் தோற்றுப்போவார்கள் என்பது மிகத் தெளிவாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ், சிங்கள மக்களின் உயிரைக் காப்பாற்ற நினைத்தோம்.
ஐ. நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இந்திய அல்லது அமெரிக்க கப்பல்கள், ஐ.நா. கொடியை பறக்கவிட்டு, போர் வலயத்தில் இருந்து பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலி உறுப்பினர்களை வெளியேற்றும் என்பது ஒப்பந்தம்.
சரணடைந்தவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்யப்படும். இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் [இறுதியில்] அவர்கள் செய்யவில்லை. கடைசி வரை போராட விரும்பினார்கள்.