யாழ்ப்பாண நகரில் முகக்கவசம் அணியாத 25 பேர் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.நகரில் தற்பொழுது பண்டிகை காலம் என்பதினால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடியுள்ள நிலையில் நேற்றைய தினம் (02) யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினர் வீதி சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதன்போது, யாழ்.நகரின் முக்கிய வீதிகளில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய 25 பேர் கைது செய்யபட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
மேலும் இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.