பருவநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி

நாம் நடவடிக்கைகளை எடுக்க இதுவே சரியான தசாப்தம். இதை தவறவிட்டால் யாரும் தப்பிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.

கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பங்கேற்று அவர் பேசினார். பருவநிலை மாற்றம் என்பது கற்பனையானது அல்ல. அது மக்களின் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் அழித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். அண்மைய ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட சிக்கல்களை அமெரிக்கா அனுபவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்த தருணத்தை நாம் தவறவிட்டால், இன்னும் வரவிருக்கும் மோசமானவற்றிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது” என்றும் அவர் பேசினார்.