இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தனிநபர்களின் தனிப்பட்ட விடயங்கள் பாதுகாக்கப்படுகின்றதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
ஆம் அந்த அளவிற்கு நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் அனைத்து தகவல்களையும் நாம் பதிவு செய்து வைக்கின்றோம்.
சில தருணங்களில் நாம் பயன்படுத்தும் மொபைல் போன் மற்றவர்கள் மூலமாக தகவல்கள் திருடப்படுவதையும் நாம் கேள்விப்பட்டு வருகின்றோம்.
இந்நிலையில் தற்போது அனைவரும் பயன்படுத்தும் முக்கியமான ஆப்களில் ஒன்று தான் வாட்ஸ் அப் ஆகும். ஆம் இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்திவரும் இந்த ஆப்பிலும் பிரச்சினைகள் இருந்து வருகின்றது.
நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் மற்றவர்கள் பயன்படுத்துகின்றனரா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
முதலில் உங்கள் Whatsapp Activity சரிபார்க்க வேண்டும். உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் வேறு யாரேனும் அணுகினால், வாட்ஸ்அப்பில் மெசேஜ்கள் மற்றும் காலிங் ஹிஸ்டரி நீங்கள் அறியலாம்.
உங்கள் வாட்ஸ்அப்பில் நீங்கள் அனுப்பாத மெசேஜை காட்டினால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம்.
உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், முதலில் உங்கள் கணக்கில்Two-Factor Authentication என்ற விருப்பத்தை இயக்க வேண்டும். அவ்வாறு செய்வது புதிய சாதனத்தில் யாரேனும் உள்நுழையும்போது பின்னை உள்ளிடும்படி கேட்கும்… இதிலிருந்து நமது வாட்ஸ்அப் கணக்கினை மற்றவர்கள் பயன்படுத்துவதிலிருந்து தப்பிக்கலாம்.