ஹாலிவுட் இயக்குனர் க்ரிஸ்டோபர் நோலனின் அடுத்த படத்தில் நடித்த அயர்ன்மேன் புகழ் ராபர்ட் டோனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிவிட் இயக்குனர்களிலேயே வித்தியாசமான பல படங்களை எடுத்து தனக்கென தனி முத்திரை பதித்து கொண்டவர் க்ரிஸ்டோபர் நோலன். இவரது டெனட் படம் கடந்த ஆண்டில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது அடுத்தப்படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் க்ரிஸ்டோபர் நோலன். அணுகுண்டு வெடிப்பை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு ஓபன்ஹெய்மர் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அயர்ன்மேனாக நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டோனியும் நடிப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நோலனின் ஆஸ்தான நடிகரான சிலியன் மர்பியும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் 2023ம் ஆண்டு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.