இலங்கையில் குறித்த மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

இலங்கையின் எட்டு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், இந்த எச்சாிக்கையை விடுத்துள்ளது.

பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே நிலச்சரிவு ஏற்படுவதற்கான நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

காலி மாவட்டம்(நாகொட, நெலுவ, எல்பிட்டிய), களுத்துறை மாவட்டம்(புளத்சிங்கள) – கண்டி மாவட்டம்( கங்காவட்ட கோரளை, ஹரிஸ்பத்துவ, யட்டிநுவர, தொலுவ மற்றும் கங்க இஹலக்கோரள) கேகாலை மாவட்டம் – (புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல- அரநாயக்க). – மாத்தளை மாவட்டம் (ரத்தோட்டை) – நுவரெலிய மாவட்டம் (நுவரெலிய மற்றும் வலப்பனை) ஆகிய இடங்களுக்கே இந்த எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு, சரிவு முறிவுகள், பாறை சரிவுகள், வெட்டுக்கள் மற்றும் நிலம் சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவதானமாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.