நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகியது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நடிகை ரக்ஷிதா.
பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் அறிமுகமானாலும் மீனாட்சியாக நடித்து புகழடைந்தவர் நடிகை ரக்ஷிதா.
தொடர்ந்து பிற மொழி படங்களிலும் நடித்து வந்தவர், மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.
இத்தொடரிலும் ரக்ஷிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவான நிலையில், திடீரென சீரியலிலிருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பில் இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவில், நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இனி நான் இல்லை என்பது உங்களில் பலருக்கு ஏமாற்றம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் எனது சூழ்நிலையயும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், பல நேரங்களில் என்னை மதிப்பற்றவளாக உணர்ந்தேன்.
நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்பதை உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்தேன்.
ஆம் எப்படியும் அது கற்பனை கதாபாத்திரம் தான், என் முடிவு உங்களுக்கு ஏமாற்றத்தை தந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.
உங்களது மற்ற வேலைகளில் கவனம் செலுத்துங்கள், தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு உங்களது ஆதரவு தேவை என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram