பொதுப் பணத்தை தவறாக பயன்படுத்தினால் அடுத்த பிறப்பில் குயவனாகவே பிறப்பீர்கள்: அரச அதிகாரிகளிற்கு கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத்….

எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்காக செலவிடப்படும் பணத்தை தவறாக பயன்படுத்தினால் அடுத்த ஆன்மா குயவனாக பிறக்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பணத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் அடுத்த ஆன்மா பாக்கியம் பெற வேண்டும் என்றும் ஆளுநர் கூறினார்.

கடந்த புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ”வெவ்கம் புபுதுவ” திட்டத்தின் திருகோணமலை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இத்திட்டம் மிகவும் மந்தகதியில் இடம்பெற்று வருவதாகவும், இத்திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யப்படும் குளங்கள் உரிய தரம் இன்றி நிர்மாணிக்கப்படுவதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட மொறவெவ மற்றும் கோமரன்கடவல விவசாய சங்கங்களின் தலைவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்

முறையான தரம் இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களை உடனடியாக நீக்கி, சரியான நடைமுறைகளின்படி ஒப்பந்ததாரர்களை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என்றார் வட்டாட்சியர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்-

வெளிநாடுகளில் இருந்து பெறும் ஒவ்வொரு சதமும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பணம் கிடைத்தது என்பதற்காக வீணாகி விட முடியாது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இப்பணி மிகவும் மந்தகதியில் நடப்பதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாம் நீரில் தன்னிறைவு பெற்ற நாடு. 2500 ஆண்டு பழமையான விவசாய கலாச்சாரம் இருந்தது. அக்கால ஒவ்வொரு புத்திசாலிகளும் நீரினை சிக்கனமாக பயன்படுத்தினர். இந்த குளங்கள் தற்செயலாக, கடவுளிடமிருந்து கிடைத்தவை அல்ல. இவை நம் முன்னோர்களின் படைப்புகள். ஆனால் இன்றைக்கு நீர் சேமிப்புத் திட்டங்கள் எடுக்கப்படும் அளவுக்கு நமது நீர் மேலாண்மை குறைந்துவிட்டது என்று கூறுவது வேதனைக்குரியது.

இப்போது செய்வதற்கு ஒன்றுமில்லை தவறுகளை சரி செய்து கொண்டு முன்னேறுவோம். எங்களால் ஏதாவது செய்து விவசாயிகளுக்கு நீரினை கொடுக்க முடியாவிட்டால், இந்தக் கூட்டங்களில் நாங்கள் மாயாஜாலம் செய்யத் தேவையில்லை,” உரிய முறையில் தமது கடமைகளை செய்தால் மாத்திரமே போதும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்

இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் துசித பி. வணிகசிங்க, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா, வெவ்கம் புபுதுவ திட்டப் பணிப்பாளர், கோமரன்கடவல மொறவெவ பிரதேச செயலாளர்கள், மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.