மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கான முடிவு மிகவும் சாதகமான நடவடிக்கையாகும் என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கூறுகிறார்.
மேலும், இலங்கை தடுப்பூசி செயல்முறையை மிகச் சிறப்பாக நிர்வகிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை சந்தித்த போது கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுறுசுறுப்பான வீட்டு சிகிச்சைத் திட்டம் மிகவும் வெற்றிகரமானது என்றும், உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு எனவும் இலங்கைக்கான WHO பிரதிநிதி கலாநிதி அலாகா சிங் தெரிவித்துள்ளார்.