வவுனியாவில் துயரம்

வவுனியாவில் புகையிரதத்துடன் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த இளைஞர் ஒருவர் புகைரதம் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா – கல்லாற்று பாலத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மன்னார் முருங்கன் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இரு இளைஞர்கள், செட்டிகுளம் கல்லாறுப்பாலத்தில் ஏறி தங்களது தொலைபேசியில் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது மன்னார் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகைரதம் மோதியதில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மற்றய இளைஞன் பாலத்திற்கு கீழே குதித்து கீழே குதித்து உயிர் பிழைத்துள்ளார்.

சம்பவத்தில் முருங்கன் பரியாரி கண்டல் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் கண்ணா வயது 21 என்ற நபரே உயிரிழந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.